வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா: மாட்டு வண்டி- குதிரை வண்டி பந்தயம்

வம்பன்  வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா: மாட்டு வண்டி- குதிரை வண்டி பந்தயம்
X

வம்பன் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது...

மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்

வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மஞ்சன் விடுதி ஊராட்சி, கொத்தக்கோட்டை ஊராட்சி ஊர் பொது மக்களால் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை பந்தயம் நடைத்தப்பட்டாது.

முதல் பெரியமாடு போட்டியில் 10 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. இதில் முதல் பரிசாக மதுரை மாவட்டமும், இரண்டாவது பரிசாக புதுக்கோட்டை மாவட்டமும், மூன்றாவது பரிசை மதுரை மாவட்டமும் பெற்றது.சின்ன மாடு பிரிவில் 16 ஜோடி மாடுகள் பங்கேற்ற நிலையில், மதுரை மாவட்டம் முதலிடத்தையும், 2 மற்றும் 3 ஆம் பரிசை புதுக்கோட்டை மாவட்டமும் தட்டிச்சென்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய ரக குதிரை போட்டியில் 16 குதிரைகள் பங்கேற்றது. இதில் முதல் பரிசை நாகையும், இரண்டாவது பரிசை தஞ்சாவூர் மாவட்டமும், மூன்றாவது பரிசை நாகை மாவட்டமும் பெற்றது. மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
அந்தியூரில் திட்டப்பணிகளை காணொலியில் திறந்த முதல்வர்..!