திருவரங்குளம் ஊராட்சி பகுதி : அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நெடுவாசல் மேற்கு குறுவாடியில் பொதுவிநியோக நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு, உரிய இழப்பீடுகள் கிடைக்கவும், பட்டா வழங்கப்படாத வீடுகளை ஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு, நெடுவாசல் மேற்கு, குறுவாடி ஆகிய பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளையும், நெடுவாசல் மேல்பாதி கூட்டுறவு அங்காடியினையும், நெடுவாசல் மேற்கு குறுவாடியில் பொதுவிநியோக நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நெடுவாசல் மேற்கு ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தையும்,அரண்மனை தோப்பு மற்றும் ஆதிதிராவிடர் காலணியில் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களையும் நெடுவாசல் மேற்கு உடையார் தெரு, பவளத்தார்புரம் அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புள்ளான்விடுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த மெய்யநாதன் மாணவர்களிடத்தில் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்தார் மேலும் புள்ளான்விடுதி கிழக்கு, புள்ளான்விடுதி ஆதிதிராவிடர் காலனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சீரியர் தெரு, குழந்தைகள் மையம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்து அருகில் அணவயல் ஐ பிட் கிராமத்தில் பொதுவிநியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்தும், அங்கன்வாடி மையக் கட்டிடத்தை ஆய்வு செய்து புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு கருத்துருதயாரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாங்காடு கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ஆனந்தி இளங்கோவன், வட்டாட்சியர் செந்தில்நாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu