திருக்கட்டளை ஊராட்சியில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

திருக்கட்டளை ஊராட்சியில் வீடுகளில் மழைநீர்  சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
X

திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளின் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி.

திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளின் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் அதிகளவில் இடி மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுக்கோட்டையில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு இடியுடன் பெய்த கன மழையால் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கட்டளை ஊராட்சி திருநகர், அண்ணா நகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த அடை மழையின் காரணமாக மேல கொலையில் உள்ள பாசன குளம் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியது இதனால் திரு நகர், அண்ணா நகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல், பாம்பு மற்றும் விஷ பூச்சிகள வீட்டுக்குள் தண்ணீரில் இருந்து வீட்டுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்துடன் இரவு முழுதும் தூங்காமல் கண்விழித்து காத்திருந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதிகளில் கனமழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை உள்ளது இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகமும் திருக்கட்டளை ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக இப்பகுதியில் உள்ள வரத்து வரிகளை சரி செய்தும், திருநகர் பகுதியில் சறுக்குப் பாலம் அமைத்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேட்டுப்பட்டி கேட் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!