புதுக்கோட்டை அருகே பெருங்களூரில் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

புதுக்கோட்டை அருகே  பெருங்களூரில் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

தமிழக அரசு அறிவித்துள்ள விதி முறைகளை கடைபிடித்து சாலை போடும் பணி முறையாக நடைபெறவில்லை

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே சாலை போடும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சியில் முல்லை நகரிலிருந்து காட்டுப்பட்டி கிராமத்திற்கு செல்லும் 1200 மீட்டர் தொலைவிலான புதிய தார்சாலை பத்தாண்டுகளுக்குப் பிறகு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த நான்கு மாதகாலமாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது அந்த பகுதிகளில் சாலை போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை போடும் பணி தமிழக அரசு அறிவித்துள்ள விதி முறைகளை கடைபிடித்து முறையாக சாலை போடும் பணி நடைபெறவில்லை எனக் கூறி அப்பகுதியில் பொதுமக்கள் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படாததால் சாலை போடும் பணியை நிறுத்திவிட்டு சாலை போடும் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.மேலும் தற்போது இந்த பகுதியில் பத்து வருடங்களுக்கு பிறகு சாலை போடும் பணி நடைபெறுகிறது முறையாக மாவட்ட நிர்வாகம் இந்த சாலை போடும் பணி நடைபெறுகிறது என கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர். புதுக்கோட்டை அருகே சாலை போடும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!