சொந்த அண்ணன் மகளை கர்ப்பமாக்கிய சித்தப்பா தூக்கிட்டு தற்கொலை

வன்கொடுமை செய்ததால், தற்கொலை செய்து கொண்ட மணிமேகலையின் சித்தப்பாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியைச் சேர்ந்த தர்மலிங்கம்(50) இவர் கோவையில் தங்கி பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் மணிமேகலை(13) தர்மலிங்கத்தின் உடன்பிறந்த தம்பியும் சித்தப்பாவுமான செந்தில்(45) வீட்டில் தங்கி 9 - ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி மணிமேகலை அவரது சித்தப்பா செந்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சிறுமியின் உடலை ஆலாங்குடி போலீசார் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததை தொடர்ந்து நேற்று முன் தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமியின் வயிற்றில் 7 மாதக் குழந்தை இருந்தது தெரியவந்து. இதையடுத்து, சிறுமி மற்றும் குழந்தையின் மாதிரிகளை சேகரித்து, தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்ததையடுத்து, கீரமங்கலம் போலீசார் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை, போக்சோ வழக்காக மாற்றி சிறுமியின் சித்தப்பா செந்திலை தேடி வந்தனர். இந்நிலையில் , செந்தில் தலைமறைவான செந்திலை தேடப்படும் நபராக அறிவித்து போலீஸார் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதனை அறிந்த செந்தில் கொத்தமங்கலம் அய்யனார்கோவில் வனப்பகுதியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் வனப்பகுதிக்கு சென்று செந்திலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த அண்ணன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அவரது சித்தப்பாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu