கறம்பக்குடியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
X

கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கருக்காகுறிச்சி வட தெருவில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் ஏற்கனவே சோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை எண்ணெய்க் கிணற்றில் 463 சதுரகிமீக்கு எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 10ஆம் தேதி சர்வதேச ஏலத்திற்கான அறிவிப்பை விடுத்திருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை இனிமேல் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் இன்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்