உயிரை பணயம் வைத்து பேருந்தின் மேற்கூரையில் தொங்கிச் செல்லும் மாணவர்கள்

உயிரை பணயம் வைத்து பேருந்தின் மேற்கூரையில் தொங்கிச் செல்லும் மாணவர்கள்
X

ஆலங்குடியில் பள்ளி வேலை நாட்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் தனியார் பேருந்தின் மேற்கூரையில் தொங்கிக் கொண்டும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இல்லாத காரணத்தினால் ஒரே பேருந்தில் இது போல பயணிக்கின்றனர்

புதுக்கோட்டையில் உயிரை பணையம் வைத்து பேருந்தின் மேற்கூரையில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் பெற்றோர்கள் அச்சமடைந்தனர்..

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.இதனால் பேருந்துகளில் தினம்தோறும் பல லட்சம் பேர் இலவசமாக பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்துகளில் அதிக அளவில் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர்.குறிப்பாக பள்ளிகள் செயல்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதால் பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் மேற்கூரையில் ஏறி பயணம் செய்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பள்ளி வேலை நாட்களில் காலை மாலை வேலையில் அதிக அளவில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காத காரணத்தினால் ஒருசில தனியார் பேருந்துகளில் ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இல்லாத காரணத்தினால் ஒரே பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் மேற்கூரையில் ஏறி கொண்டு பேருந்தில் செல்வதால் பெரும் விபத்து ஏற்படும் அச்ச நிலை வருகிறது.

எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ மாணவிகள் செல்வதற்கு அதிக அளவில் பேருந்துகளை கிராமப்புறங்களில் இயக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!