ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அறந்தாங்கியில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆலங்குடி வந்த லாரி ஒன்றை அழியாநிலை எனுமிடத்தில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி தலைமையிலான அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர்
.அதில் 118 முட்டைகளை கொண்ட 8400 கிலோ அரிசி இருந்துள்ளது.இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் ரேஷன் அரிசி வெளி மாவட்டத்திற்கு கடத்தப்படுகிறதா என்ற கோணத்தில் லாரியை ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து மாவட்ட உணவுப் பொருள்கள் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் லாரியில் ஏற்றப்பட்டு உள்ள அரிசி ரேஷன் அரிசியா அல்லது வேறு அரிசியா என்பது குறித்து ஆய்வு செய்ய புதுக்கோட்டையில் உள்ள ஆய்வகத்திற்கு அரிசியின் மாதிரியை அனுப்பவும்உத்தரவிட்டனர்.
இதனிடையே அங்கு குவிந்த ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் லாரியின் ஓட்டுனர் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட லாரியில் கொண்டு செல்லப்பட்டு அரிசி அறந்தாங்கி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து ஏற்றப்பட்ட கெட்டுப்போன பழைய அரிசி என்றும்
முறையாக ஆலைகளின் உரிமையாளர்களிடம் எழுத்துபூர்வமான கடிதம் பெற்று தான் இந்த அரிசி கோழிப் பண்ணைகளுக்கு தீவனத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது என்றும் ஆனால் அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக லாரியை மடக்கி பிடித்து பிரச்சனை செய்வதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான போலீசார் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்தவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu