தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஆசிரியர்கள்

தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஆசிரியர்கள்
X

 கோவிலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபப்பள்ளி வாசலில் குளம் போல் தேங்கி இருக்கும் மழை நீர் 

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தேங்கி நிற்கும் மழை நீரினை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப்பட்ட காரணத்தினால் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பள்ளி முன்பு குளம்போல் அதிகளவில் மழைநீர் தேங்கி உள்ளதால் பள்ளிகளுக்கு மழை நீரில் நடந்து சென்று மாணவ மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.

தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மழைக்காலம் என்பதால் தற்போது டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்று பரவ கூடிய சூழ்நிலையில் அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்றுவது பரவக் கூடிய சூழ்நிலையில் இருந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!