உலக தொண்டு தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்துக்கு அரிசி வழங்கல்
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நேசக்கரம் முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்ட அரிசி
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், கொரோனா தொற்று காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியும், முகக்கவசம் கிருமிநாசினி மருந்துகள் உள்ளிட்டவைகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் பல்வேறு பணிகளில், இணைந்து நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று உலக தொண்டு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை நேசக்கரம் முதியோர் இல்லத்திற்கு 100 கிலோ உணவிற்கான அரிசி, முதியோர் இல்லத்திற்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்ததார்.முன்னாள் தலைவர்கள் வெங்கடாசலம், பொருளாளர் கதிரேசன், ஓவியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பொறியாளர் சையது மற்றும் நேசக்கரங்கள் இல்லத்தின் நிர்வாகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu