ஆலங்குடி அருகே 60 அடி கிணற்றில் விழுந்த கன்னுக்குட்டி உயிருடன் மீட்பு

ஆலங்குடி அருகே 60 அடி கிணற்றில் விழுந்த கன்னுக்குட்டி உயிருடன் மீட்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 60 அடி கிணற்றில் விழுந்த கன்னுக்குட்டியை போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

60 அடி கிணற்றில் விழுந்த கன்னுக்குட்டியை போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நிலைய எல்லைக்கு உட்பட்ட சம்பட்டி விடுதியில் குமாரவேல் என்பவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணறு உள்ளது.

இந்த நிலையில் இந்த கிணற்றின் அருகில் தங்கராசு என்பவருக்கு சொந்தமான கன்றுகுட்டி கிணற்றின் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி 60 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு வந்தனர். 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த கன்னுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்