100% வாக்களிக்க வேண்டி பேரணி

100% வாக்களிக்க வேண்டி பேரணி
X
ஆலங்குடி அருகே குப்பக்குடியில் 100% வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் சமூக இடைவெளி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கும் விதமாகவும் பேரணி நடைபெற்றது.

குப்பக்குடி ஈ சேவை மையத்தில் தொடங்கிய பேரணியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவோம், முகக்கவசம் அணிவோம், அனைவரும் வாக்களிப்போம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகளான ஏடி காலணி, கடைவீதி வழியாக சென்றனர். இந்தப் பேரணியில் வெண்ணாவல்குடி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், குப்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலங்குடி அருகே குப்பக்குடியில் 100% வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் சமூக இடைவெளி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கும் விதமாகவும் பேரணி நடைபெற்றது.



Tags

Next Story
ai in future agriculture