திருவரங்குளம் அருகே புற்றடி ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர்களை பரவசப்படுத்திய தீ மிதித்தல் திருவிழா.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர்களை பரவசப்படுத்திய தீ மிதித்தல் திருவிழா.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா என கோயில் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் களைகட்ட தொடங்கி உள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் மாவட்டமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
அதேபோல் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் அருகே பாரதியார்நகர் புற்றடி ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் 20 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பால்குடம் அக்னி காவடி பறவைக் காவடி அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருவரங்குளம் குளக்கரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பறவை காவடி பால்குடம் காவடி மற்றும் 3 அடியிலிருந்து 10 அடிவரை அலகு குத்தி நேத்து கடனுக்காக திருவரங்குளம் குளக்கரையில் இருந்து பாரதியார் நகர் புற்றடி ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
மேலும் பாரதியார் நகர் பகுதி பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாகச் சென்று பின்னர் புற்றடி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குலவை போட்டு பாட்டு பாடியும் வழிபட்டனர். அலகு குத்தி வந்த பக்தர்கள் கோயிலின் முன்பு அடிக்கப்பட்ட மேள தாளத்திற்கு ஏற்றவாறு சாமி வந்து நடனமாடி அக்னி குண்டத்தில் பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக் கடனை செய்த பக்தர்களை பார்த்த பொதுமக்கள் மிகுந்த பரவசம் அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu