புதுக்கோட்டை கருக்காகுறிச்சியில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை  கருக்காகுறிச்சியில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட்   ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சியில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கருக்காகுறிச்சி வட தெருவில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் ஏற்கனவே சோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை எண்ணெய்க் கிணற்றில் 463 சதுரகிமீக்கு எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 10ஆம் தேதி சர்வதேச ஏலத்திற்கான அறிவிப்பை விடுத்திருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை இனிமேல் செயல்படுத்தக் கூடாது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் .

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்