புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு, பலி 3 ஆக உயர்ந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு, பலி  3 ஆக உயர்ந்தது
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னாங்குட்டி(70). விவசாயியான இவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், இவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சின்னாங்குட்டி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மதுரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் மட்டும் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தக் நிலையில் தற்போது சின்னாங்குட்டி என்பவரும் இருந்துள்ள நிலையில் ஆலங்குடி தாலுகாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளதல் ஆலங்குடி தாலுகா பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு