புதுக்கோட்டை அருகே தைல மரக் காட்டில் தீ, கிராம மக்கள் தீயை அணைத்தனர்

புதுக்கோட்டை அருகே தைல மரக் காட்டில்  தீ,  கிராம மக்கள்  தீயை அணைத்தனர்
X

புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை ஊராட்சியில் உள்ள  தைலமரங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. அதனை கிராமமக்கள் போராடி அணைத்தனர்.

புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை ஊராட்சி பகுதியில் திடீரென தைலமரக்காடு தீ பிடித்து எரிந்தது. கிராம மக்கள் தீயை அணைத்தனர்.

புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள தைல மரக் காட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது

அப்பகுதியில் கரும்புகை சூழ தொடங்கியது.இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் உடனடியாக விரைந்து வந்து இலைகளை கொண்டும், மண்ணை எடுத்து வீசியும் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது அக்கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். அதே வேளையில் அப்பகுதியில் இதுபோல் அடிக்கடி தைல மரக் காட்டில் தீ விபத்துக்கள் ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

தீ விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து சமூகவிரோதிகள் இதுபோன்ற தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!