புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறிய இரண்டு கடலை மில்களுக்கு அதிகாரிகள் சீல்

புதுக்கோட்டையில்  ஊரடங்கை மீறிய இரண்டு கடலை மில்களுக்கு அதிகாரிகள் சீல்
X

புதுக்கோட்டை மாவட்டம் அருகே ஆலங்குடியில் கடலை அரவை மில்களுக்கு வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.

புதுக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறிய இரண்டு கடலை, அரவை மில்களை வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி பணியாளர்களுடன் இரண்டு கடலை அரவை மில்கள் திறந்து செயல்படுவதாக தகல் கிடைத்தது ,

வருவாய்த் துறையினர் அந்த இரண்டு மில்களையும் சோதனை செய்தனர்.அப்போது சமூக இடைவெளியின்றி பாதுகாப்பற்ற முறையில் இரண்டு மில்களிலும் சேர்த்து 20 பெண்களுடன் செயல்பாட்டில் இருந்ததை உறுதி செய்தனர்.

பின்னர், பணியாளர்களை வெளியேற்றிய அதிகாரிகள், இரண்டு கடலை மில்லிற்கும் போலிசார் பாதுகாப்போடு பூட்டி சீல் வைத்தனர்.இதுபோன்று விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள், நிறுவனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிப்பதோடு சீல் வைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு