தடுப்பூசி செலுத்திக் கொள்ள தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தண்டோரா அடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென பிரசாரம் செய்து வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தண்டோரா மூலம் ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 735 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 11 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. 2 நகராட்சிகள் பதிமூன்று பேரூராட்சிகள் என 15 பகுதிகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொது மக்களின் பெயர்கள் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் ஒரு கிராம் தங்கம் உள்ளிட்ட நான்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பிரசாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் இன்று நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.ஊராட்சி பணியாளர்கள் இருவர் வீதி வீதியாக சென்று தண்டோரா அடித்தவாறு பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!