சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு பாராட்டு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு பாராட்டு
X

ஆலங்குடியில் ரெட் கிராஸ் சார்பில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை   செய்த மருத்துவருக்கு பாராட்டு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொண்ட டாக்டரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் பாராட்டினர்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு ரெட்கிராஸ் சங்கம் பாராட்டு.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ரெட் கிராஸ் துணை சேர்மனும் பொது மக்களுக்கு சேவை ஆற்றி வரும் மருத்துவர் முத்தையாவிடம் ,ரெட் கிராஸ் செயலாளர் முருகன் சக்கரை நோயால் கால் பாதிக்கபட்ட ஏழ்மையில் உள்ள சிதம்பரம் என்ற நபருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டாா்.இதையடுத்து அந்த நபருக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் அறுவை சிகிச்சை செய்தார்.

இந்த சேவையை பாராட்டி ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்ற நிகழ்வில், ரெட் கிராஸ் துணை சேர்மனும் மருத்துவருமான முத்தையாவுக்கு, ரெட் கிராஸ் செயலாளர் முருகன் துணை தலைவர் முத்துராமன், துணை செயலாளர் லட்சுமி நாராயணன், துணைபொருளாளர் முருகேசன் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொண்ட ரெட் கிராஸ் நிர்வாகிகளை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!