1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் டி.எஸ்.பி., முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மரியதாஸ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கருக்காகுறிச்சி தெற்கு தாளக்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சுவகற்காக 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களில் சுமார் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் அழித்தனர். மேலும், இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.


Tags

Next Story