புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் உயிழக்கும் புள்ளி மான்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் சாலையில் வாகனத்தில் மோதி இறந்து கிடந்த புள்ளிமான்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளில் தொடர்ந்து புள்ளிமான்கள் உயிரிழப்பது குறித்து விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகள் அதிக அளவில் இருந்து வருகிறது.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 99 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு இருந்து வருகிறது.அதே போல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில், நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடர்ந்த காட்டுப் பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் அதிக அளவில் தேசிய பறவையான மயில், புள்ளி மான்கள், முயல், மலைப் பாம்பு போன்ற வனவிலங்குகள் இந்த காடுகளில் இருந்து வருகிறது.தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகளை விட்டு சாலைகளில் அதிக அளவில் தேசிய பறவையான மயில் புள்ளிமான்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால் பல்வேறு இடங்களில் சாலை விபத்துகளில் பலியாகி மயில் மற்றும் மான்கள் இறந்து வரும் நிலைத் தொடர் கதையாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே அண்மையில் ஐந்து வயதுடைய புள்ளிமான் சாலை விபத்தில் பலியாகி நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே காட்டுப்பகுதியில் இருந்து உணவுக்காக வெளியே வந்த புள்ளி மான், அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு சாலையோரத்தில் இறந்து கிடந்ததை, அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் பார்த்துச் சென்றனர்.
இதைப் போல புள்ளி மான்கள் காடுகளில் இருந்து வெளியே வந்து, வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது. வாயில்லா ஜீவன்களின் அநியாய உயிழப்பை தடுப்பதற்கு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu