மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால்தான் நெகிழி பயன்பாட்டை ஒழிக்க முடியும்
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால்தான் நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்ய முடியும் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சந்தித்து ஆறுதல் கூறி பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஆலங்குடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து நீர் நிலைகளில் கரைகள் பலமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் மூன்று தினங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குறைந்த அளவு மக்களை தான் முகாமில் தங்க வைத்துள்ளோம் முகாமில் தங்குவதற்கு பொது மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.சட்டமன்றத்தில் அறிவித்தபடி தமிழகத்தில் நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் 14 வகையான நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக தற்போதைய அரசு பல்வேறு இடங்களில் நெகிழி பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
தமிழகத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதேபோன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இதற்கு தடை விதித்துள்ளது.அதன் தொடர் நடவடிக்கையாக படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் நெகிழிப் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும்.நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை முதல்வர் செய்து வருகிறார்.அது தொடர்பான செயல் திட்டம் விரைவில் முதல்வர் அறிவிப்பார்
நெகிழி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தமிழகத்தில் மூடப்பட்டு வந்தாலும், அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நெகிழி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பல இடங்களில் நெகிழிப் பைகள் தயாரிப்பது குடிசை தொழிலாகவே செய்து வருகின்றனர்.மக்கள் மனதில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் தான் நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாகத் கட்டுப்படுத்த முடியும். தற்போது இருபதிலிருந்து முப்பது சதவீத மக்கள்தான் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கிறார்கள்.நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பழகிவிட்டார்கள்.
அதனால் படிப்படியாகத்தான் இதனை கட்டுப்படுத்த முடியும் இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கொண்டுவரப்படும்.வீட்டிலேயே மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று பிரித்து உள்ளாட்சி அமைப்புகள் வாங்கிவிட்டால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.தமிழக முதல்வர் மழைக்காலங்களில் களத்தில் நின்று நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu