முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் நினைவேந்தல் நிகழ்வில் நமது மக்கள் கட்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த நமது மக்கள் கட்சி நிர்வாகிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வெங்கடாசலத்தின் பதினோராவது நினைவு நாளை முன்னிட்டு நமது மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராஜமாணிக்கம் மாநிலத் தலைவர் தமிழ் நாடு முத்தரையர் சங்கம் அகில பாரத கோலி சமாஜ் அவர்களின் உத்தரவுக்கு இணங்க வடகாட்டில் உள்ள அவரது மணி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரின் மகன் ராஜபாண்டி அனைவரையும் வரவேற்றார் நமது மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சரவணதேவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் சின்னத்தம்பி யாதவ், மாநில மகளிர் அணி செயலாளர் மாலா, மாநில மாணவரணி செயலாளர் ஜெயக்குமார், நமது மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் பொன்னழகர், வடக்கு மாவட்ட செயலாளர் இராம சுரேஷ் வருமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட மகளிரணி செயலாளர் அமராவதி, பூக்கடைசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நமது மக்கள் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu