விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய்கள் : அதிகாரிகள் ஆய்வு

விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய்கள் : அதிகாரிகள் ஆய்வு
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வாணக்கான் காடு பகுதியில் எண்ணெய்   கிணறுகள் அமைப்பதற்காக  ஓஎன்ஜிசி நிறுவனத்தில்  அமைக்கப்பட்டிருந்த குழாய்களை   பார்வையிட்டு ஆய்வு செய்த  அதிகாரிகள்

ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட குழாய்களை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

விவசாய நிலங்களில் போடப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய்களை அகற்றுவதற்காக அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசு விவசாய நிலங்களில் ஓஎன்ஜிசி குழாய்கள் அமைக்கப்பட்டு என்னை மற்றும் கேஸ் எடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசு ஓஎன்ஜிசி கிணறுகள் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓஎன்ஜிசி கிணறுகள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக 1994 ஆம் ஆண்டு 9000 அடியில் ஆயில் மற்றும் கேஸ் எடுப்பதற்காக வாணக்கன்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் பைப்புகள் அமைக்கப்பட்டது.இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் அந்த திட்டத்தை அப்போது கைவிட்டனர்.

இதனையடுத்து கிராமசபைக் கூட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாணக்கன் காடு ,நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் மற்றும் கேஸ் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றிவிட்டு, அந்த நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாய மற்றும் பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றிவந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் விவசாய நிலங்களில் ஓஎன்ஜிசி கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணக்கன்காடு பகுதியில் ஏற்கெனவே ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டிருந்த கேஸ் மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக போடப்பட்ட குழாய்களை இன்று ஓஎன்ஜிசி அலுவலகத்தில் இருந்து பொது மேலாளர் டிரில்லிங் சந்தான குமார், பொறியாளர் மணவாளன் ராதா கிருஷ்ணன், டெக்னாலஜிஸ் சீனியர் அருண்குமார், ஓஎன்ஜிசி தாசில்தார சந்திரசேகர் ஆகியோர்கள் வாணக்கன்காடு கிராமத்தில் ஓஎன்ஜிசி சார்பில் பைப் லைன் அமைக்கப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

பின்னர், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பைப்புகள் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களையும் அளக்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், ஓஎன்ஜிசி குழாய்களை அகற்றிவிட்டு அந்த நிலங்களை உரிய விவசாயிகளிடையே ஒப்படைக்கவே ஓஎன்ஜிசி அதிகாரிகள் இந்த ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றுவதற்காக இன்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டதால் விவசாயிகள் மற்றும் அப்பகுதியில் பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!