தேங்கி நின்ற மழைநீரில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை சடலமாக மீட்பு

தேங்கி நின்ற மழைநீரில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை சடலமாக மீட்பு
X
மழைநீரில் மிதக்கும் குழந்தையின் சடலம்.
ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் சடலமாக அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கூமத்திவாரியில் தேங்கி நின்ற மழைநீரில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் சடலமாக அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை அவ்வழியே தனது தோட்டத்திற்கு சென்ற ரவி என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு, இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் அம்பிகாபதி இந்த சம்பவம் குறித்து வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் தொப்புள் கொடி இன்னும் குழந்தையை சுற்றி இருப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து யார் குழந்தையை வீசி சென்றது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்