ஆலங்குடி: திருவரங்குளம்கடைவீதியில் இந்து முன்னணியினர் தர்ணாபோராட்டம்

ஆலங்குடி: திருவரங்குளம்கடைவீதியில் இந்து முன்னணியினர்  தர்ணாபோராட்டம்
X

திருவரங்குளம் கடைவீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஊராட்சியில் பல ஆண்டுகளாகசாலையோ ரங்களிலும்,பொதுஇடங்களிலும் தங்கியிருக் கும் வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட திருவரங்குளத்தில் இந்து முன்னணி சார்பில் திடீர் தர்னா போராட்டம நடைபெற்றது.

திருவரங்குளம் கடை வீதியில், இந்து முன்னணி மாவட்டச் செயலர் அரங்குளவன் தலைமையில் தர்னா போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்: ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி பணத்தை அத்து மீறி செலவு செலவு செய்வதை தடுக்க வேண்டும். திருவரங்குளம் கேவிஎஸ். நகர்ப்பகுதியில் 12 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஊராட்சி பொறுப்பில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவரங்குளம் ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் தங்கியிருக்கும் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் அதே போல், குரங்கு, நாய் தொல்லை அதிக அளவில் இருப்பதால், அதனை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் குடிதண்ணீர் முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்னா போராட்டம் நடத்தப்பட்டது. இதில், இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!