காளான் வளர்ப்பு, மலர் சாகுபடி குறித்த பயிற்சி கருத்தரங்கம்

காளான் வளர்ப்பு, மலர் சாகுபடி குறித்த பயிற்சி கருத்தரங்கம்
X

புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே, காளான் வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது

காளான் வளர்ப்பு மற்றும் மலர் சாகுபடி குறித்த பயிற்சி கருத்தரங்கம், திருவரங்குளத்தில் நடைபெற்றது .

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை துறை மற்றும் அட்மா விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு வழங்கப்பட்ட செயல்விளக்க காளான் வளர்ப்புக் குடில் மற்றும் செயல் விளக்கம் பற்றி, திருவரங்குளம் வட்டார அட்மா விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஆய்வு நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்தில், பெரம்பலூர் வேளாண்மை துறை துணை இயக்குனர் கீதா, புதுக்கோட்டை வேளாண்மை துறை துணை இயக்குனர் பெரியசாமி ஆகியோர், பணிகளை ஆய்வு செய்து, கொத்தகோட்டை அம்மா பண்ணை மகளிர் காளான் வளர்ப்பு பணிகளை பார்வையிட்டு, குழு உறுப்பினர்களிடம் காளான் வளர்ப்பில் கிடைக்கும் வருமானம் பற்றி கேட்டறிந்தனர்.

ஒருங்கிணைந்த பண்ணை பயிர் பாதுகாப்பு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் பற்றி விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார் பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய, வம்பன் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் தனலட்சுமி, மலர் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

கருத்தரங்கில், திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, விரிவாக்கத் திட்ட தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன், உதவி மேலாளர் ஆரோக்கியராஜ், ஸ்ரீநிதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!