புதுக்கோட்டை நகர பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை நகரத்தில் மழைநீர் தேங்கியிருந்த பல்வேறு இடங்களுக்கும் சென்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று பலத்த வெயில் அடித்தாலும் மாலை நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் புதுக்கோட்டை திருக்கட்டளை, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் பெரும் துயரம் அடைந்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட அமைச்சர் உடனடியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று தேங்கி நின்ற மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டு, மழையால் பாதித்த பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

புதுக்கோட்டை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படுவதை கேள்விப்பட்டு உடனடியாக ஆய்வு பணியை மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன் செயலுக்கு அப்பகுதியில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

Tags

Next Story