அரசு பள்ளி மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் மெய்யநாதன்

அரசு பள்ளி மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் மெய்யநாதன்
X

ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் மெய்யநாதன்

மாணவிகள் தங்களுக்கு பேருந்து வசதி கழிப்பிட வசதி பள்ளி வகுப்பறையில் பல்வேறு அடிப்படை வசதிகள் கொடுக்க வேண்டுமென கூறினர்

அரசு பள்ளி மாணவிகளிடம் குறைகளை அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பள்ளிகளில் இன்று மாணவிகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடப்படுகிறது அதனை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் அப்பள்ளியில் படிக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகளிடம் அன்பாக மாணவிகளிடம் தங்களுடைய குறை கூறுங்கள் என கேட்டார்.

இதனை அடுத்து, மாணவிகள் தங்களுக்கு பேருந்து வசதி கழிப்பிட வசதி பள்ளி வகுப்பறையில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட அமைச்சர் மெய்யநாதன் மாணவிகள் கூறிய அனைத்து கோரிக்கையும் உடனடியாக நிறைவேற்றி தருகிறேன் என மாணவிகளிடம் வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் இல்லை என மாணவிகள் கூறியதை அடுத்து தன்னுடைய சொந்த செலவிலேயே ஒரு கணித ஆசிரியரை நியமித்துக் கொள்ளுங்கள் அவருக்கு நான் சம்பளம் தருகிறேன் என அமைச்சர் மெய்யநாதன் உத்தரவாதம் அளித்தால், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அமைச்சர் மெய்யாநாதனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!