ஆலங்குடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

ஆலங்குடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்
X

அமைச்சர் மெய்யநாதன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

ஆலங்குடி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேருந்து நிலையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன்

போலியோ நோய் இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் ஒரே சமயத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோய் கிருமிகள் பரவுவதை தடுத்து, போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.

அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வினை இன்று காலை தொடங்கி வைத்துள்ளார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1,67,490 குழந்தைகளுக்கு 1,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் வகையில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது.

சென்ற வருடம் 1,55,725 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கென பொதுசுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சத்துணவு மையங்கள், பள்ளிகள், துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கோவில்கள், நகராட்சி மகப்பேறு மையங்கள்,

நகராட்சி மருந்தகங்கள், புகைவண்டி நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, பொது சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் ராமசுந்தர், வட்டாட்சியர் பெரியநாயகி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story