நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு துவா செய்தார் அமைச்சர் மெய்யநாதன்

நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு துவா செய்தார் அமைச்சர் மெய்யநாதன்
X

ஆலங்குடியில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.

ஆலங்குடியில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு துவா செய்தார் அமைச்சர் மெய்யநாதன்.

நாளை இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று கடைசி நோன்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி கலிபுல்லா நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இஸ்லாமிய சகோதரர்களுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்