ஆலங்குடி அருகே மரமடக்கி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

ஆலங்குடி அருகே மரமடக்கி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட மரமடக்கி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஆலங்குடிஅருகே மரமடக்கி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரமடக்கி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து வீரர்கள் உறுதிமொழியை ஏற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும் 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் காளையுடன் மல்லுக்கட்டி அடக்கினர்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் அண்டா, குண்டா, மிக்ஸிஇ கிரைண்டர்இ தங்க நாணயம் ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மரக்கன்று மற்றும் மஞ்சப்பையை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அனைவருக்கும் வழங்கினார்.

மேலும் சிறந்த காளைகளுக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் இருசக்கர வாகனங்கள் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!