ஆலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: தொடக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்

ஆலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: தொடக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலிருந்து 900 காளைகளும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மாரியம்மன் திருக்கோயில் ஆலங்குடி நாட்டார்கள் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் விழா கமிட்டி யாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து வீரர்கள் உறுதிமொழியுடன் போட்டியை துவக்கி வைத்தனர்.

இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, உள்ளிட்டபல்வேறு பகுதியில் இருந்து 900 ஜல்லிக்கட்டு காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை பிடிப்பதற்காக வீரர்களும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் மல்லுக்கட்டி வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளி குதித்து சென்ற காளைகளுக்கும் மற்றும் வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு அண்டா, குண்டா, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆலங்குடி காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் மூலம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்