ஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசுக்கு அனுமதி இல்லை -அமைச்சர் மெய்யநாதன்
ஆலங்குடி அருகே சேந்தன்குடி யில் மறைந்த மரம் தங்கசாமி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டைமாவட்டத்தில் மரங்களின் காவலர் என போற்றப்படும் மரம் தங்கசாமி மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடியில் அனுசரிக்கப்பட்டது. இதில்மரம் தங்கசாமியை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் சேந்தன்குடியில் நடைபெற்றது.
இந்தகருத்தரங்கில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திமுக மாநில சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேயன் சேனாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரங்களை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினர்.
மேலும்மரம் தங்கசாமி அமைந்துள்ள வானகம் பசுமைக் காட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் புதிய மரக்கன்றுகளை நடவு செய்தனர். விழாவில்சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது:
சுற்றுச்சூழலையும் இயற்கையையும் பாதுகாக்க தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதுஅமைந்துள்ள தமிழக அரசுதான் மரங்களைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து. தன்னுடைய 25 வருட அரசியல் வாழ்க்கையில் தான் மரங்களை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒரு மரத்தை வெட்டியது இல்லை என்றும் கூறினார்.
மேலும்மரங்களை வளர்க்கவும், காக்கவும் அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் ஒவ்வொருவரும் ஐந்து மரங்களையாவது நடவு செய்து அதனை போட்டோ எடுத்து பதிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும் கடலூர் மாவட்டங்களில் 5 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற தமிழ சுற்றுசூழல் துறையிடம் மத்திய அரசு அனுமதி கேட்ட போது தர முடியாது என மறுத்து கையெழுத்திடப்பட்டள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு இடங்களிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த விடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்:
தமிழகம் முழுவதும் 50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்,ஏற்கனவே மாநில அளவிலான பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, அடுத்து மாவட்ட அளவிலான குழுக்கள் விரைவில் அமைக்கப்பட்டு அதற்கான செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் மரம் தங்கசாமி குடும்ப உறுப்பினர்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் என பலர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu