பழுதடைந்த நிலையில் இருக்கும் மின்மாற்றியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பழுதடைந்த நிலையில் இருக்கும் மின்மாற்றியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

வாண்டா கோட்டை பகுதியில் பத்து வருடங்களாக பழுதடைந்து இருக்கும் மின்மாற்றி.

ஆலங்குடி அருகே பழுதடைந்த நிலையில் இருக்கும் மின்மாற்றியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாண்டாகோட்டை மற்றும் மணியம்பலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விவசாய நிலத்தில் கடந்த பத்து வருடங்களாக 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்பை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பம் துருப்பிடித்து அதிலுள்ள கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.

தொடர்ந்து வாண்டா கோட்டை மணியம்பலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்றி தராமல் இருந்து வருகின்றனர்.

தொடர்ந்து மழை காலங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் மின் இணைப்பையும் சரி செய்து கொடுப்பதற்கு கூட மின் வாரிய அலுவலர்கள் வருவது கிடையாது. காரணம் மின் கம்பத்தில் ஏற முடியாது. ஏறினால் மின்கம்பம் முறிந்து விடும் என்ற அச்சத்தில் மின்வாரிய ஊழியர்களும் வருவதில்லை. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!