/* */

நல்லேர் பூட்டி விளைநிலத்தை உழுது வழிபட்டு புத்தாண்டை வரவேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை அருகில் விவசாயிகள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது வழிபட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

HIGHLIGHTS

நல்லேர் பூட்டி விளைநிலத்தை உழுது வழிபட்டு புத்தாண்டை வரவேற்ற விவசாயிகள்
X

புதுக்கோட்டை அருகில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகள் நல்லேர் பூட்டி டிராக்டர் மூலம் விளை   நிலத்தை உழுது வழிபட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில், சித்திரை முதல் நாளான இன்று புதுக்கோட்டை ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை, கொத்தமங்கலம், செரியலூர், கீரமங்கலம், வடகாடு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மழை பொழிய வேண்டி நல்லேரு பூட்டி விளை நிலத்தையும், வானத்தையும் வழிபட்டனர்.

மாங்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி தேங்காய் பழம் தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து விளைநிலத்தில் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

அதன் பின்பு வரிசையில் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும் பூஜைகள் செய்த பட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது. இதில் பத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் சித்திரை முதல்நாள் உழவுப் பணியை உற்சாகத்தோடு தொடங்கினர்.

Updated On: 14 April 2022 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  6. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  7. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  9. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!