அஜித்தின் வலிமை படம் வெற்றி பெற வேண்டி 50 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்த ரசிகர்கள்

அஜித்தின் வலிமை படம் வெற்றி பெற வேண்டி  50 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்த  ரசிகர்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம் பகுதியில் அஜித்தின் வலிமை படம் வெற்றி பெற பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள அஜித்தின் ரசிகர்கள்

பனைமர காதலர்கள் அமைப்பு- அஜித் ரசிகர்கள், கொத்தமங்கலம் குடிக்காடு குளக்கரையில் 10ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்

அஜித்தின் வலிமை படம் வெற்றி பெற வேண்டி 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் பனைமர காதலர்கள் என்ற அமைப்பினர் தொடர்ந்து சில ஆண்டுகளாக ஏரி கண்மாய் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் விதைகளை நடவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு மழை காலம் தொடங்கி யுள்ள நிலையில், இன்று பனைமர காதலர்கள் அமைப்பினர் மற்றும் அஜித் ரசிகர்கள், கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள குடிக்காடு குளக்கரையில் பத்தாயிரம் பணம் விதைகளை நடவு செய்தனர்.

இதில், அஜித் ரசிகர்கள் கலந்து கொண்டு, வலிமை திரைப்படம், வெற்றி பெற வேண்டி பனை விதைகளை ஆர்வமுடன் நடவு செய்தனர். தொடர்ந்து வரும் நாட்களிலும் 50 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்ய உள்ளதாகவும், அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர். தங்களது தலைவரின் படம் வெற்றி பெற வேண்டி கொத்தமங்கலம் கிராமத்தில் அஜித் ரசிகர்கள் பனை விதைகளை நடவு செய்த நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


Tags

Next Story