அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன்-திமுக வேட்பாளர்

அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன்-திமுக வேட்பாளர்
X

புதுக்கோட்டை ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு தாரை தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக மெய்யநாதன் போட்டியிடுகிறார். அவர் செல்லும் இடங்களில் பொது மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக ஆவணதாகோட்டை பகுதியில் தாரை, தப்பட்டை வெடி முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களுடன் பேசிய வேட்பாளர், ஆலங்குடியில் எதிர்கட்சி எம்எல்ஏ.,வக இருந்து இந்த பகுதியில் பல கோடி மதிப்பில் ஆலங்குடி தொகுதிக்கு நிறைய பணிகள் செய்திருக்கின்றேன். இனி ஆளுங்கட்சி எம்எல்ஏ.,வாக ஆன பின்பு அனைத்து அடிப்படை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன் என உறுதி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!