கள்ளச்சாராயத்தொழிலில் ஈடுபட்டு திருந்தி வாழ்பவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
சாராயம் விற்று தற்போது திருந்தி வாழ்ந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்று, தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு காவல்துறை சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது.
மழையூர் காவல் நிலையம் மழையூர் காவல்சரகம் கருப்பட்டிபட்டி ஊராட்சி, கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு முகாமிற்கு, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரீனா பேகம் , ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் குணவதி , மருத்துவர் அகல்யா , சட்ட ஆலோசகர்கள் வெங்கடேஷ், செந்தில் ராஜா, உதவி ஆணையர் கலால்துறை மாரி ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.
இதையொட்டி, கள்ளச் சாராயம் விற்று, தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், மரக்கன்றுகளை வழங்கினார். களபம் இளவரசன் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ரீனா மெர்சி பள்ளி மாணவர்கள் மற்றும் மழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பட்டி பட்டி முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu