ஆலங்குடி அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ஒருவர் கைது.

புதுககோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 2000 லிடடர் கள்ளச் சாராய ஊறல் போலீசாரால் அழிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொம்பரம்பட்டி பாதரகுளம் அருகே ரெங்கசாமி என்பவரது தோட்டம் மற்றும் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் அந்த பகுதியில் இன்று காலை முதல் அதிரடி சோதனை செய்தனர். பேரல் மற்றும் குடங்களில் 2000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சாராய ஊறல்களை பறிமுதல் செய்த போலீசார் வருவாய் துறையினர் முன்னிலையில் அழித்தனர். மேலும் சாராய ஊறல்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சாமிநாதன் என்பவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்,.

Tags

Next Story