புதுக்கோட்டை அருகே பழம்பெரும் கோயிலில் மழை நீரில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்
திருவரங்குளம் அருகே கோவிலுக்குள் மழைநீர் புகுந்து உள்ள நிலையில் மழை நீரில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
புதுக்கோட்டை அருகே பழம்பெரும் கோயிலில் மழை நீரில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வரலாற்று புகழ்பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோயில் உள்ளது ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கோயிலைச்சுற்றி தெப்பக்குளம் போல் தண்ணீர் தேங்கி விடுவது வழக்கமாக உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் கோயிலுக்குள் புகுந்து மூலஸ்தானம் உயர்த்த சுற்றுப் பிரகாரங்கள என கோவிலைச் சுற்றி மழைநீர் உள்ளே புகுந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில், இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தண்ணீரில் நின்றபடி, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கோயிலை சுற்றி மூலஸ்தானம் வரை தண்ணீர் தெப்பக்குளம் போல் மழை நீரும் ஊற்று நீரும் சேர்ந்து தெப்பக்குளம் போல் சூழ்ந்து கொண்டுள்ளது இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu