கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்: தொற்று பரவும் ஆபத்து

கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்: தொற்று பரவும் ஆபத்து
X

அறந்தாங்கி அருகே உள்ள கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் கூட்டமாக பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்ததால்,  நோய் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. 

ஆலங்குடி அருகே, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில், கூட்டமாக பொதுமக்கள் குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோன வைரஸ் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக வைரஸ் தொற்று உருமாறி ஒமைக்ரான் வைரஸ் தொற்றாத பரவி வருகிறது. தமிழக அரசு, பல்வேறு நோயத்தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உள்ள கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இன்று கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மீன்களை வாங்கி வருவதால் நோய் தொற்று பரவும் அச்சம் இருந்து வருகிறது.

Tags

Next Story