நகைச்சுவை நடிகர் வடிவேல் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு

நகைச்சுவை நடிகர் வடிவேல் வேடமணிந்து  கொரோனா  விழிப்புணர்வு
X

புதுக்கோட்டை மாவட்டம் களபம் கிராமத்தில் வடிவேலு வேடமணிந்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய கிராமிய கலைஞர் இளவரசன்.

புதுக்கோட்டை அருகே வடிவேல் போல் வேடமணிந்து கொரோனா 3 வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கிராமிய கலைஞர்.

கொரோனா மூன்றாவது அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் கிராமத்தில் கிராமியக் கலைஞர் இளவரசன், வடிவேல் போல் வேடமணிந்து வடிவேல் பேசும் வசனங்களில் பேசி இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மற்றும் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும், முகக்கவசத்தை எவ்வாறு அணிய வேண்டும் என்பது குறித்தும் வடிவேல் பாணியில் பாடல்கள் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொரோனா மூன்றாவது அலை குறித்து வடிவேல் பாணியில் பாடல்கள் பாடியும், நகைச்சுவை செய்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திய கிராமியக் கலைஞர் இளவரசன் செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!