அரசு பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம்: கலெக்டர் கவிதா ராமு நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மலையூர் அரசு பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
புதுக்கோட்டை மழையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கம்யூட்டர் சயின்ஸ்,வணிகவியல்,கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையில் பாடப்பிரிவிற்கு அனுமதி வாங்கும் போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்வதாக கூறியுள்ளனர்.
ஆனால் பள்ளித் தலைமையாசிரியரோ பள்ளி தொடங்கி 5 மாதம் ஆகியும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். மாணவர்கள் ஆசிரியர் நியமனம் குறித்து கேட்ட பொழுது இப்பாடத்திற்கு இப்பகுதியில் படித்த ஆசிரியர்கள் இல்லை .எனவே நீங்களே இப்பாடத்திற்கு படித்த ஆசிரியர்கள் இப்பகுதியில் இருந்தால் அழைத்து வாருங்கள் என கூறியுள்ளார்.
மாணவர்கள் தேர்வு நேரம் நெருங்கி வருவதால் நீங்கள் கூறியதால் தானே உங்களை நம்பி இப்பாடப்பிரிவில் சேர்ந்தோம் என கேள்வி கேட்டுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரடியாக சந்தித்து முறையிட்டுள்ளனர். மாணவர்களின் மீது அக்கறையின்மையோடு செயல்பட்ட மழையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.எம்.அரங்கசாமி மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி்சத்திய மூர்த்தி கூறுகையில், புதியதாக தொடங்கப்படும் பாடப்பிரிவிற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்ய ஓரிரு ஆண்டுகள் ஆகும்.பணியிடம் நிரப்பும் வரை அப்பள்ளி நிர்வாகம் தான் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தற்பொழுது மாணவர்கள் நலன் கருதி தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்யும் பொருட்டு 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu