குழந்தைகள் பாதுகாப்பு :தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன்

குழந்தைகள் பாதுகாப்பு :தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன்
X

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழியினை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு தலைமையில் இன்று பள்ளி மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான உறுதிமொழியை மாணவிகள் வாசிக்க அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உறுதி ஏற்றுக்கொண்டனர்

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தொலைபேசி எண்களை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார்.

தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு தமிழக அரசும் தமிழக பள்ளிக்கல்வித் துறையும பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய விழிப்புணர்வு கையேடு மற்றும் தொலைபேசி எண்களை தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டுள்ளார். அதில் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளியில் படிக்கும் மாணவிகள் உடனடியாக அந்த தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், பெண் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழியினை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு தலைமையில் இன்று பள்ளி மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனள்.

பின்னர் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நிகழ்ச்சியில் பேசியதாவது:

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உரிமை, பாதுகாப்பு, சட்ட உதவி, பாலியல் நலக் கல்வி, மனநலம், உடல் நலம், கற்றல் தொடர்பான ஆலோசனை மற்றும் உதவி, பாலியல் தொல்லை புகார்கள் குறித்து தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2411 மற்றும் வாட்ஸ்அப் எண் 94433 14417 என்ற எண்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தற்போதைய வெளியிட்டுள்ளோம்.

மேலும் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மகளிர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் குழந்தைகளுக்கு 1098, மாணவர்களுக்கு 14417 மற்றும் மகளிருக்கு 181 என்ற மாநில அளவிலான உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இன்றைய நிகழ்ச்சியில் பேசினார்.

மேலும் விழா மேடையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான உறுதிமொழியை மாணவிகள் வாசிக்க அமைச்சர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அர்ஜுன்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil