ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு

ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு
X
ஆலங்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டை பெரியகுளம் ஓடையில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை மர்ம நபர்கள் புதைத்துள்ளனர்,

இந்நிலையில் குழி ஆழமாகத் தோண்ட படாததால் நாய்கள் குழிக்குள் இருந்த குழந்தையை இழுத்து வெளியே போட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

அந்த பகுதி வழியாக விவசாய பணிக்கு சென்றவர்கள் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!