பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க கண்டன  ஆர்ப்பாட்டம்
X
ஆலங்குடி பஸ் ஸ்டாப்பில் பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு முக்கம் பஸ் ஸ்டாப்பில் மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து பா.ஜ.க,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் பாலு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில், ஒன்றிய தலைவர்கள் பாஸ்கர், ராம்குமார், வெளிநாடு வாழ் அணி மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால், விவசாய அணி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், திருவரங்குளம் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், முருகேசன், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் கிரீன்குட்டி திருவரங்குளம் பிஜேபி ஊடகப்பிரிவு பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture