பல்வேறு கோவில்களில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழா

பல்வேறு கோவில்களில்  பக்தர்கள் இன்றி  நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழா
X

திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சந்நிதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பழங்கள், மஞ்சள், தயிர் உள்ளிட்ட ஒன்பது வகையான பூஜை பொருள்களுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மூலஸ்தானத்தில் உள்ள சுயம்பு லிங்க சிவபெருமானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் நந்தி பகவானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது.முதல் ஆவணி மாத பிரதோஷ விழா இன்று புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்களியின்றி பிரதோஷ விழா நடைபெற்றது. இதேபோல், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில், திருவிடை யார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் ,திருமலை ராய சமுத்திரம் கதிர் காமேஸ்வர காமேஸ்வரி அம்பாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.


Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்