ஆலங்குடியில் விதியை மீறி அதிக கூட்டம் 2 திருமண மண்டபத்திற்கு சீல்

ஆலங்குடியில் விதியை மீறி அதிக கூட்டம் 2 திருமண மண்டபத்திற்கு சீல்
X
ஆலங்குடியில் இன்று நடந்த 2 திருமணங்களில் கொரோனா விதிமுறைகள் முற்றிலும கடைப்பிடிக்கப்படாததால் அதிகாரிகள் 2 திருமணமண்டபங்களை மூடி சீல் வைத்தனர்.

கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வைரஸ் தொற்று அதிக அளவில் பெருகி வருகிறது இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியில் அதிக அளவில் சுற்றுவதால் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு திருமண முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்களில் குறைந்த அளவே உறவினர்களை கொண்டு திருமண நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என அறிவித்திருந்தது

இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரண்டு திருமண மண்டபங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் தமிழக அரசு அறிவித்த கொரோன தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் திருமண நிகழ்ச்சிகள் நடத்தியதற்காக 2 திருமண மண்டபங்களை அரசு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்

#தமிழ்நாடு #புதுக்கோட்டை #சீல் #கொரோனா #TamilNadu #Pudukottai #Seal #Corona #Instanews #இன்ஸ்டாசெய்தி #ruleviolation #alangudi #ஆலங்குடி #marriagehall #coronavirus #விதிமீறல்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்