கீரமங்கலத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

கீரமங்கலத்தில்  மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு
X

மின்சாரம் தாக்கி இறந்தவர்களில் ஒரு தொழிலாளி

கீரமங்கலத்தில் குளிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மின்சாரம் தாக்கி சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

கீரமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் குமாரவேல்(45). பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுந்தரம்(65). சுமை தூக்கும் தொழிலாளர்களான இவர்கள் இருவரும், இன்று வேலை முடித்துவிட்டு, கீரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றனர்.

குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை பிடித்தபோது அதன் வழியே மின்சாரம் பாய்ந்ததில் குமாரவேல், சுந்தரம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளத்துக் கரையில் உள்ள மின் விளக்குகளுக்கு சென்ற மின் வயர் வழியாக மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கீரமங்கலம் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities